
Dawid Malan has been recalled to the England squad for the third Test against India (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஜாக் கிரௌலி, டோமினிக் சிப்லி ஆகியோர் இங்கிலாந்து அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.