
Day 1 of the WTC Final is washed out (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணித்துளிகளே உள்ள நிலையில், தொடர் மழை நீடித்து வருகிறது. இதனால் மைதானத்தின் முக்கியப் பகுதிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியின் டாஸ் நிகழ்வும் தமாதமாக்கப்பட்டது.
சவுத்தாம்டன் நகரில் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கனமழை பெய்யும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்றைய நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த கரணத்தினால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.