ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
டெல்லி கேப்பிட்டல்ஸ்
இந்த சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் டெல்லி வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்துள்ளனர். குறிப்பாக விபத்தில் சிக்கி மீண்டு களம் திரும்பியுள்ள கேப்டன் ரிஷப் பந்த் சொந்த ரசிகர்கள் மூன் விளையாட ஆர்வமுடன் இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறது.
அந்த அணியின் பந்துவீச்சில் முகேஷ்குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பேட்டிங்கில் ரிஷப் பந்த், ஜேக் ஃபிரெசர் மெக்குகர், பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதே சமயம் காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத டேவிட் வார்னர் இப்போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலின் 5ஆம் இடத்தில் நீடிக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக விளையாடிவரும் ஹைதராபாத் அணி மும்பைக்கு எதிராக 277 ரன்னும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 287 ரன்னும் குவித்து இத்தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் , அபிஷேக் ஷர்மா அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்கள். மிடில் வரிசையில் ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத் ஆகியோரும் அதிரடியாக செயல்பட்டு அணிக்கு கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், நடராஜன் போன்ற வீரர்கள் தொடர்ந்து எதிரணிக்கு தலைவலியை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.
Win Big, Make Your Cricket Tales Now