ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பு குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
Trending
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய போராடி வருகிறது. அந்த அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தினாலும் மற்ற பேட்டர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், மற்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர். இதனால் இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒருசில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய்/பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்புடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. அணியின் பேட்டிங், பவுலிங் என இரு பிரிவும் வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல் ஆகியோர் தங்களது ஃபார்முக்கு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கே), அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
Win Big, Make Your Cricket Tales Now