ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்ற மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஐபிஎல் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் காரணமாக அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியில் விளையாடும் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றி,5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இனிவரும் ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் அந்த அணி உள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் சோபிக்க தவறிவருவது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் தொடர்ந்து எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்துவருகின்றனர். ஆனால் முகேஷ் குமார், கலீல் அஹ்மத், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே போன்ற வீரர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிவருவது அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் நடப்பு சீசனில் சில பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அந்த போட்டியிலும் அந்த அணி கடைசி வரை போராட வேண்டி இருந்தது. குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அந்த அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில, விருத்திமான் சாஹா, சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோர் அதிரடியாக விளையாடும் திறனை கொண்டிருந்தாலும், தொடர்ச்சியாக அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மறுபக்கம் பந்துவீச்சில் ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோருடன் தமிழக வீரர் சாய் சுதர்ஷனும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சில் மோஹித் சர்மா, சந்தீப் வாரியர் போன்ற வீரர்களும் எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்து வருவதால், குஜராத் அணி தங்களது பந்துவீச்சை மட்டுமே நம்பி இப்போட்டியில் களமிறங்கவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: ஷுப்மான் கில் (கே), விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோஹித் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now