டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருவதால், இந்த வெற்றியானது இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் முயற்சியுடன் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், நடராஜன் ஆகியோரை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. இதனால் இப்போட்டியில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகாம், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், தங்கராசு நடராஜன்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 3 தோல்விகளைச் சந்தித்து 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. அதேசமயம் தற்போது அணியின் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதன் காரணமாக அது அணிக்கு உதவக்கூடும். மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறனர். இப்போட்டியில் வெற்றிபெற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் கூடுதல் கவனத்துடன் விளையாடு
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெரால்ட் கோட்ஸி.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 06
- குஜராத் டைட்டன்ஸ் - 03
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 03
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - கே.எல். ராகுல், அபிஷேக் போரெல்
- பேட்ஸ்மேன்கள் - ஷுப்மான் கில் (துணை கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் சுதர்ஷன் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- ஆல்-ரவுண்டர் - அக்சர் படேல்
- பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், ஜெரால்ட் கோட்ஸி.
Win Big, Make Your Cricket Tales Now