Advertisement

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 03, 2024 • 15:12 PM
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)  தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று  நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending


டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

அதேவேளையில் பந்து வீச்சில் தொடக்க ஓவர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவும், இறுதிக்கட்ட ஓவர்களில் முகேஷ் குமாரும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக் செயல்பட்டால் அணியின் பலம் அதிகரிக்கும். இதனால் இப்போட்டியில் பெரிதளவில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அபிஷேக் போரல், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அஹ்மத்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.  இதனால் இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்வதில் முனைப்பு காட்டக்கூடும். அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது.

இவர்களுடன் பின் வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் வலுசேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் இளம் வீரரான ஹர்ஷித் ராணா நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஆண்ட்ரே ரஸல் பந்து வீசுவது கூடுதல் கேகேஆர் அணியின் கூடுதல் பலமாக உள்ளது. இருப்பினும் மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

கேகேஆர் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement