டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வருகின்றது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் ரிஷ்ப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், நேருக்கு நேர் மோதிய போட்டிகள், உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஐபிஎல் தொடர் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை விளையாடியும் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிட்டல்ஸ். இந்நிலையில் இம்முறை அந்த அணி முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானியின் பயிற்சியின் கீழும், புதிய கேப்டன் அக்ஸர் படேல் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கருண் நாயர், அஷுதோஷ் சர்மா ஆகியோரும் பந்துவீச்சில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், நடராஜன், துஷ்மந்தா சமீரா போன்ற வீரர்களும் உள்ளனர். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், தங்கராசு நடராஜன்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முயற்சியில் இம்முறை புதிய கேப்டன் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கவுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், ஆயூஷ் பதோனி, அப்துல் சமத், மேத்யூ ப்ரிட்ஸ்கி என அதிரடியான வீரர்களைக் கொண்டுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மயங்க் யாதவ், ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் காயத்தால் அவதிபட்டு வருவது அணிக்கு பின்னடவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார், ஆகாஷ் தீப், ஷாபாஸ் அஹ்மத், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷமார் ஜோசப் ஆகியோருடன் ஷர்தூல் தாக்கூரும் அந்த அணியில் இணைந்துள்ளது அந்த அணிகு ஓரளவு சாதகமாக பார்க்கப்பட்டாலும், அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: மிட்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப், மணிமாறன் சித்தார்த்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 05
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 02
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ரிஷப் பந்த், அபிஷேக் போரெல்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- ஆல்-ரவுண்டர் - அக்சர் படேல்
- பந்து வீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now