
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டி ஒன்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் சுற்றுகு முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியம் என்பதால் இப்போட்டியின் மீதாதன எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இன்றைய போட்டி இந்த சீசனில் கடைசி லீக் ஆட்டமாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிவெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமே. இருப்பினும் அந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.