
Delhi Capitals vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
DC vs MI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
- நேரம் - ஏப்ரல் 13, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)