Advertisement

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 27, 2024 • 13:06 PM
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

விறுவிறுப்பாக நடபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடரில் இன்று நடைபெறவுள்ள 43ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Trending


இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.  அந்த அணியின் பேட்டிங்கில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் பிரித்வி ஷா, ஷாய் ஹோப் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

அணியின் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். ஆண்ட்ரிச் நோர்ட்ஜே அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது தலைவலியாக இருக்கிறது. இம்பேக்ட் வீரராக முந்தைய ஆட்டத்தில் விளையாடிய ராஷிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் இன்றைய போட்டியிலும் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: பிரித்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அக்ஸர் படேல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, ரசிக் சலாம்.

மும்பை இந்தியன்ஸ்

மறுபக்கம் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி கண்டு 6 புள்ளிகளைப் பெற்று பட்டியளின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை அணியில் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் உள்ளனர்.

அவர்களைத் தவிர்த்து நல்ல தொடக்கங்களை பெறும் இஷான் கிஷன், டிம் டேவிட், கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் மேலும் வலுப்பெறும். அணியின் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது பாதகமாக உள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement