Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 27, 2025 • 03:56 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 27, 2025 • 03:56 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், ஆர்சிபி அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Also Read

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்களைத் தழுவி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றிகளை பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்க முடியும் என்பதால்,அந்த அணி கூடுதல் முயற்சியுடன் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் கருண் நாயர், அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் உள்ளிட்டோர் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா உள்ளிட்டோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியானது இந்த ஐபிஎல் தொடரில் 6 வெற்றிகள், 3 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ராஜத் படிதர், தேவ்தத் படிக்கல் மற்றும் டிம் டேவிட் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், குர்னால் பாண்டியா உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

எஞ்சியுள்ள வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவது கடினமாகும். மேற்கொண்டு அந்த அணி கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸை சொந்த மைதானத்தில் வீழ்த்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதுதவிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸிடம் ஏற்பட்ட முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடனும் ஆர்சிபி அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 19
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 12
  • முடிவில்லை - 01

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் – கே.எல். ராகுல் (துணை கேப்டன்), பில் சால்ட், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), கருண் நாயர், தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர் - அக்ஸர் படேல்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement