Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 16, 2025 • 11:57 AM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 16, 2025 • 11:57 AM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 
இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Also Read

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வந்த நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. அணியின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியதன் காரணமாக அந்த அணி இந்த தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதே தோல்விக்கான முக்கிய காரணமாகும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் உள்ளிட்டோர் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், மோஹித் சர்மா உள்ளிட்டோர் ரன்களைக் கட்டுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்த வரையில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், நிதீஷ் ரானா உள்ளிட்டோர் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் மஹீஷ் தீக்ஷ்னா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர். அதேசமயம் இன்றைய போட்டிக்கான பந்துவீச்சு துறையில் சில மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா. இம்பாக்ட் பிளேயர் - குமார் கார்த்திகேயா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 29
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 14
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 15

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - கருண் நாயர் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரியான் பராக், விபராஜ் நிகம்
  • பந்து வீச்சாளர்கள்- குல்தீப் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement