
Delhi Capitals vs Royal Challengers Bengaluru Dream11 Prediction: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
DEL-W vs BLR-W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்களூரு
- இடம் - கோடம்பி கிரிக்கெட் மைதானம், வதோதரா
- நேரம் - பிப்ரவரி 17, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)