
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளுக்குள் முடிந்து விட்டது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் வெறும் 144.2 ஓவர்கள் தான் வீசப்பட்டது.அதில் 34 விக்கெட்டுகள் பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தான் போன்ற நாடுகள் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் அமைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியா அமைத்த ஆடுகளத்தால் போட்டி ஒன்றரை நாளுக்குள் முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் பேசுகையில், "காபா பிட்ச் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது குறித்து நடுவர்களிடம் பேசினேன். இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்து கூட நன்றாக பவுன்ஸ் ஆவதை ஏற்க முடியவில்லை. இதுபோன்ற பிட்ச்களும், ஆடுகளமும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்படி சிறந்த விளம்பரமாக அமையும்.
ஒன்றரை 34 விக்கெட்டுகள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்று கூட எனக்கு புரியவில்லை. போட்டி ஆரம்பிப்பதற்குள் முடிந்து விட்டது என் வாழ்வில் இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.