
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வென்றதற்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாட் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். சீனிவாசன், கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வீழாவின் போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலிம், “இந்த விழாவிற்கு தோனியின் ரசிகராக வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல கருணாநிதியும் தோனி ரசிகர்தான். எனவே, இந்த விழாவிற்கு மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், பூரிப்புடனும் வந்துள்ளேன்.
சென்னை என்றாலே சூப்பர்தான். அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டிருந்தாலும், முதல்வர் என்கிற முறையில் என் மனம் மழை குறித்தும், அதனால் ஏற்பட்ட வெள்ளம் குறித்தும் தான் யோசித்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில் இளைப்பாரமாக இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன்.