NZ vs ENG, 1st Test: பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து; பேட்டிங்கில் மீண்டும் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிஸில் 40ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஜோடி சேர்ந்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் 59 ரன்களில் ஜேமிசன் பந்தில் உடைந்தது. ஜாக் க்ராவ்லி 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த விக்கட்டும் ஜேமிசனுக்கே விழுந்தது. போப் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Trending
அடுத்ததாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 11 ரன்களுக்கு காலின் டி கிராண்ட்ஹோம் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வரும் சரிவிற்கு இதுதான் தொடக்கப்புள்ளி என அப்போது யாருக்கும் தெரியவில்லை.
அடுத்து விளையாடிய ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கீப்பர் பென் போக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி , டிரண்ட் போல்ட் , கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விகெட்டுகளை எடுத்தனர். காலின் டி கிரண்ட் ஹோம் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 36 ஒவர்களில் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 4 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஃபோக்ஸ் 7 ரன்களிலும், பிராட் 9 ரன்களிலும் அடுத்து களமிறங்கிய மேத்யூ பர்கின்சன் 7 ரன்களோடும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து 9 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் வில் யங் ஒரு ரன் மட்டுமே எடுத்தநிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் டாம் லேதமுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
அதன்பின் 15 ரன்களில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த டாம் லேதமும் மாட்டி பாட்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் டேவன் கான்வே 6 ரன்களுடனும், டேரில் மிட்செல் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now