
இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் தீபக் சஹார். இவரை கடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் என்ற பெருமையை தீபக்சாகர் கடந்த மெகா ஏலத்தில் படைத்தார். ஆனால் 14 கோடி ரூபாய் கொடுத்தும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கடந்த சீசனில் வெளியேறினார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த தீபக் சஹார் கடந்த அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை விரக்தி அடையச் செய்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபக் சஹார், “தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதமாக என் உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்தேன்.
ரிஷிகேஷ் சென்று யோகா உள்ளிட்ட பயிற்சியை மேற்கொண்டேன். தியானம் செய்ததோடு கிரிக்கெட் பயிற்சியின் அவ்வப்போது செய்தேன். நமது அடிப்படையை கவனிக்க எல்லோருக்கும் இது போன்ற நேரம் தேவை. ஆண்டு முழுவதும் பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் நான் கிரிக்கெட்டில் இருந்து இந்த காலத்தில் விலகி என் உடல் அளவிலும் மனதளவிலும் மேன்மை பெற கவனம் செலுத்தினேன்.