
ஸ்விங் கிங் என்ற பெயர் பெற்ற புவனேஸ்வர் குமார் ஒன்றுக்கும் மேற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகள் சர்வதேச இந்திய அணிக்காக விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தார். பின் அதிலிருந்து மீண்டுவந்த புவனேஷ்வர் குமார், பந்தை வேகமாக வீசவும் முடியாமல், பந்தை ஸ்விங் செய்யவும் முடியாமல் தடுமாறியதால், அசிங்கப்படுவதற்கு முன்பே இவர் ஓய்வை அறிவித்துவிடுங்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் அந்த விமர்சனத்தையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 தொடருக்கான ரெகுலர் வீரராக வலம் வரத் தொடங்கினார். அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் வட்டத்தில் நல்ல பெயரை சம்பாதித்து வந்த புவனேஷ் குமார், ஆசிய கோப்பையில் தன் பெயருக்கு தானே கலங்கத்தை தேடிக்கொண்டார்.
ஆசியக் கோப்பை தொடரில் முக்கியமான இரண்டு போட்டிகளிலும், அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக திகழ்ந்த புவனேஸ்வர் குமார், நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து அதிருப்தியை சம்பாரித்துள்ளார்.