
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவுள்ள இங்கிலாந்து அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலி, “நாங்கள் வெற்றி பெறுவோம். லார்ட்ஸ் பிட்ச் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டில் நெருக்கடி கொடுத்தோம். அதனால்தான் அந்தத் தோல்வியை மற்ற தோல்விகளை விட சாதகமாகப் பார்க்கிறோம். அந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டுக்கு பிரமாதமானது. ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு வரலாறு காணாத பார்வையாளர்கள் வந்திருந்தனர்.