
Delhi Capitals Squad Under Quarantine After A Player Tests Covid Positive: Report (Image Source: Google)
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, வரும் புதன் அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக புணேவில் விளையாடவுள்ளது. இன்று புணேவுக்கு டெல்லொ அணி வீரர்கள் செல்வதாக இருந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தற்போது தில்லி வீரர் ஒருவரும் ரேபிட் ஆண்டிஜெட்ன் பரிசோதனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு ஆர்டி - பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது தில்லி அணி.