
கடந்த 2014 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரன் மழை பொழிந்து 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று கேப்டனாகவும், 2016-ல் கோப்பையையும் பெற்றுக் கொடுத்தவராகவும் திகழ்ந்த டேவிட் வார்னரை, கடந்த வருடம் சுமாராக செயல்பட்டார் என்ற காரணத்துக்காக பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய அந்த அணி நிர்வாகம், பெஞ்சில் அமர வைத்து இறுதியில் கழற்றிவிட்டு அவமானப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து 15ஆவது சீசனில், 6.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், நாட்டுக்காக விளையாடியதால் ஆரம்பத்தில் 3 போட்டிகளை தவற விட்ட நிலையில் பங்கேற்ற எஞ்சிய 12 போட்டிகளில் 5 அரை சதங்கள் உட்பட 432 ரன்களை 48.00 என்ற சிறப்பான சராசரியில் 150.52 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி, கடைசி நேரத்தில் மும்பையிடம் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. இதனைத் தொடர்ந்து வார்னர் உட்பட அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளனர்.