-mdl.jpg)
இந்தியாவின் பிரபலமான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதார் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஜூலை 24 முதல் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த இந்த தொடரில் மயங் அகர்வால் தலைமையில் அசத்தி வந்த தெற்கு மண்டல அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மத்திய மண்டலத்தை எதிர்கொண்டது.
நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மத்திய மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர் மாதவ் கௌசிக் தடுமாறி 6 ரன்களில் அவுட்டாக மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சிவம் சௌத்ரியும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து வந்த யாஸ் துபே 77 ரன்கள் எடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் உபேந்திரா யாதவ் 26, ரிங்கு சிங் 26, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் தெற்கு மண்டலத்தின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதன்மூலம் 50 ஓவர்களில் மத்திய மண்டல அணி 9 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்தது.