
Destiny is always in your hands, you can look to give 100 percent: Rishabh Pant (Image Source: Google)
நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.
அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.
மே 1 அன்று கடைசியாக லக்னெளவுக்கு எதிராக விளையாடினார் டெல்லி வீரர் பிருத்வி ஷா. அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை.