
'Destructive' Afghan batters deserve BBL chance: Rashid Khan (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஐபிஎல் உள்பட பல டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஆஅப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு டி20 லீக் போட்டிகளில் அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களையும் டி20 லீக் போட்டிகளில் தேர்வு செய்யவேண்டும் என ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஷித் கான், “டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை விடவும் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் இடம்பெற்றால் கூடுதலாக மகிழ்வேன். உலகமெங்கிலும் நடைபெறும் போட்டிகளில் எங்கள் நாட்டுப் பந்துவீச்சாளர்கள் பலர் விளையாடி வருகிறார்கள். அதேபோல எங்களுடைய பேட்டர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்.