
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கரோனா தொற்றிலிருந்து மீண்டநிலையில் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் முறைப்படி இணைந்தார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “ ஆர்சிபி அணியின் இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார். தேவ்தத் படிக்கலுக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி படிக்கல் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்தார். அவரை ஆர்சிபி அணியின் மருத்துவக் குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைல் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.