Devon Conway Record: ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் டெவான் கான்வே அரைசதம் அடித்ததன் மூலம் முன்னாள் வீரர் காலின் முன்ரோவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டெவான் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றதுடன் சில சாதனையையும் படைத்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியில் டெவான் கான்வே அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 11ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம், நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த இடதுகை வீரர் எனும் காலின் முன்ரோவின் சாதனையை டெவான் கான்வே சமன் செய்துள்ளார். முன்னதாக காலின் முன்ரோ 62 இன்னிங்ஸ்களில் 11 அரைசதங்களை அடித்ததே சாதனையாக இருந்தது.