Advertisement

ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வேவிற்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் டெவான் கான்வே; ரிச்சர்ட் கிளீசனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2024 • 02:13 PM

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அதிலும் குறிப்பாக இந்த தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 4 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2024 • 02:13 PM

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக தொடரின் முதல் பாதி போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியாகின. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது. 

Trending

அவரது காயம் குறித்து அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், டெவான் கான்வேவின் காயம் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், ஓரிரு நாளில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கயத்திலிருந்து குணமடையாத காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து டெவான் கான்வே விலகியுள்ளார். 

 

இதனை ஐபிஎல் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை தொடக்க வீரராக பயன்படுத்தினாலும், அவரது சமீபத்திய ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் டெவான் கான்வே அணிக்கு திரும்பி மீண்டும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தொடரிலிருந்தே விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுவரை 24 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே, 9 அரைசதங்களுடன் 924 ரன்களைக் குவித்துள்ளார். 

இந்நிலையில் காயம் காரணமாக விலகிய டெவான் கான்வேவிற்கு மாற்றாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் ரிச்சர்ட் கிளீசனை அவரது அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட் கிளீசன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement