
13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்படுகிறது. இதற்காக பத்து மைதானங்கள் தயார் செய்யப்பட்டு, 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருகிறது.
அதேசமயத்தில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அட்டவணை அறிவிப்பதில் சில குளறுபடிகள் ஏற்பட்டன. அறிவிக்கப்பட்ட அட்டவணை மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கடுத்து உலகக் கோப்பை டிக்கெட் குறித்த பிரச்சினைகள் வெளியே வந்தன. பிறகு அவை அப்படியே யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது.
மேலும் உலகக் கோப்பைத் தொடர் நடத்தப்படும் மைதானங்களில் ஒன்றான இமாச்சல பிரதேஷம் தர்மசாலா மைதானத்தில் அவுட்ஃபீல்டு மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் வீரர்கள் பெரிய காயங்களுக்கு உள்ளாக நேரலாம்.