நான் விளையாடியதில் இவரே மிகச்சிறந்த பினீஷர் - பாப் டூ பிளெஸிஸ்!
உலகின் மிகச்சிறந்த பினீஷர் இவர் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த பாப் டூ பிளெஸிஸ். சென்னை அணி வீரர்களில் இவருக்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம் என்றுதான் கூறவேண்டும். மற்ற வீரர்களை கூட அவ்வளவாக கேலி கிண்டல் செய்து வருவது வழக்கமான விஷயம். ஆனால் இவருக்கு அவ்வளவாக கேலி கிண்டல்கள் வராது.
இவர் சமீபத்தில் தான் விளையாடிய கிரிக்கெட் வீரரகளுள் இந்த வீரர் தான் மிகச்சிறந்த பினிஷர் வீரர் என ஃபாப் டூ பிளேஸிஸ் கூறியுள்ளார்.
Trending
டூ பிளெஸிஸ் இடம் நீங்கள் விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த பினிஷர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இவரிடம் அந்த கேள்வி கேட்டவுடன் அடுத்த நிமிடமே டி வில்லியர்ஸ் தான் மிகச்சிறந்த பினிஷர் என்று அவர் கூறுவார் என்று நினைத்த வேளையில் எதிர்பாராதவிதமாக மகேந்திர சிங் தோனியின் பெயரை அவர் கூறினார். அவர் கூறியதில் அவ்வளவு பெரிய ஆச்சரியம் இல்லை.
ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஒரு மிகச்சிறந்த பினிஷர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவுக்காக விளையாடும் போதிலும் சென்னை அணிக்காக விளையாடும் போதிலும் இறுதி ஓவர்களில் வந்து மிக அற்புதமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்வதில் மகேந்திர சிங் தோனி ஒரு ஆகச் சிறந்த பேட்ஸ்மேன்.
மகேந்திர சிங் தோனி எந்த அளவுக்கு அதிரடியாக விளையாடுவார் என்று கூற வேண்டும் என்றால், இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சிக்சர் அடித்த ஒரே வீரர் இவர் மட்டும்தான். வேறு யாரும் இந்த அளவுக்கு சிக்ஸர்கள் அடித்தது கிடையாது. அதேபோல் இறுதி ஓவர்களில் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை 162 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக போல்லார்டு 135 சிக்ஸர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் மகேந்திர சிங் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 244 ஆகும். அதைப்போல இறுதி ஓவர்களில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அதிக ரன்கள் குவித்த ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி மட்டும்தான். இதன் காரணமாகவே டூ பிளேஸிஸ் மிகச் சிறந்த பினிஷர் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now