Advertisement

‘எல்ஜிஎம்’ டீசரை வெளியிட்டா எம் எஸ் தோனி!

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசரை எம்எஸ் தோனி மற்றும் சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 08, 2023 • 13:28 PM
 Dhoni Shares Teaser On Facebook Of 'LGM', His Debut Movie As Producer
Dhoni Shares Teaser On Facebook Of 'LGM', His Debut Movie As Producer (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.

தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால், தனது புரொடக்‌ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்து, இந்த அறிவிப்பு வெளியானது. அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில் முடிந்தது.இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். 

Trending


இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர். அதன்படி தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்திலும், சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement