Harish kalyan
‘எல்ஜிஎம்’ டீசரை வெளியிட்டா எம் எஸ் தோனி!
கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.
தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால், தனது புரொடக்ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்து, இந்த அறிவிப்பு வெளியானது. அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில் முடிந்தது.இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.
Related Cricket News on Harish kalyan
-
தோனி தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ஹீரோவானர் ஹரிஷ் கல்யாண்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ்தோனி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சூழலில் தனது முதல் திரைப்படத்தை தமிழில் இருந்து தொடங்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47