
Dhoni should bat at No.4 once CSK qualify for IPL playoffs: Gambhir (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் தற்போது சிஎஸ்கே அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த இரண்டு போட்டியிலுமே சென்னை அணியின் கேப்டன் தோனி ஆறாவது இடத்தில் இறங்கி 3 மற்றும் 11 ரன்களை குவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கிய தோனி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருருந்தார்.
இருப்பினும் தோனியிடம் பழைய அதிரடி ஆட்டம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நிலையில் தற்போது தோனி எந்த இடத்தில் களம் இறங்கி விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.