
Dhoni will not charge any honorarium for mentoring team in T20 WC: BCCI Secretary Jay Shah (Image Source: Google)
டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிக முக்கியமான தொடர். இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை கொண்டுள்ள விராட் கோலி, முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.
மேலும், இந்த டி20 உலக கோப்பையுடன் டி20 அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். டி20 அணி கேப்டனாக தனது கடைசி தொடராக அமைந்துள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் கோலி.
இந்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகாராக முன்னாள் ஜாம்பவான் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் நியமனம் இந்திய அணிக்கு கண்டிப்பாக பெரியளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.