
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் தங்களுக்கு தேவையான சில நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறையாவது ஃபாஃப் டு பிளேஸிஸ் தலைமையில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வென்று எதிரணி ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்குமா எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணிக்கு விராட் கோலி தலைமையி 2013 – 2021 வரை கேப்டனாக செயல்பட்டும் வெற்றி காண முடியவில்லை. இத்தனைக்கும் டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் முக்கிய நேரங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள பெங்களூரு அணி கோப்பையை எதிரணிகளுக்கு தாரை வார்த்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாயகன் எம்எஸ் தோனி கலந்து கொண்டார். அதில் ஒரு பெங்களூரு ரசிகர் நேரடியாக சிரித்த முகத்துடன் எங்களுடைய அணிக்கு கேப்டனாக முதல் கோப்பையை வென்று கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்த்ள்ளார்.