
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை மீண்டும் ஒரு கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில் இம்முறை கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இனி அணியை வழிநடத்தப் போவதில்லை என்று அறிவித்து, தன்னிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த தருணத்தை ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார்.