மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தது நன்றாக உள்ளது - டாம் லேதம்
வங்கதேச அணியுடன் நாங்கள் கண்ட மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது நன்றாக உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே வங்கதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 4 ரன்களில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் இனிவரும் போட்டிகளில் நியூசிலாந்து வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Trending
இந்நிலையில் நேற்றையை போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம்,“இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இதில் கடைசி வரை நாங்கள் எங்களுடைய திறனை வெளிப்படுத்தினோம். ஆனாலும் இங்கலால் கடைசி ஓவரில் இலக்கை எட்டமுடியவில்லை.
ஆனால் முந்தைய போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை இப்போட்டியில் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும் இது எங்களுக்கு மிகப்பெரும் தோல்வி தான். ஆனாலும் எங்களது பந்துவீச்சாளர் திறம்பட செயல்பட்டது பாராட்டுக்குறியது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now