ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகியது குறித்து கிறிஸ் வோக்ஸ் விளக்கம்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளதால் ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், செப்டம்பா் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். கடந்த வார இறுதியில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்), ஜோஸ் பட்லர், டேவிட் மலான் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
Trending
ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடி, கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷூயிஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் விலகியதற்கான காரணம் குறித்து பேசிய கிறிஸ் வோக்ஸ்,“சில மாதங்களுக்கு முன்பு, டி20 உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறுவேன் என எனக்குத் தெரியாது. ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டி என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் இருப்பதால் குறைந்த நாள்களில் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும். ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்று எனக்கும் விருப்பம் தான். ஆனால் ஏதாவது ஒரு போட்டியிலிருந்து விலகவேண்டிய நிலைமையில் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now