
திருநெல்வேலி: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் - கேப்டன் அருண் கார்த்திக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அருண் கார்த்திக் 5 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து 26 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிஷ் 19 ரன்னிலும், நிர்மல் குமார் 16 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றியும், ஆதான் கான் 22 ரன்ன்லும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சோனு யாதவ் மற்றும் என்எஸ் ஹரிஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹரிஷ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களையும், சோனு யாதவ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் தரப்பில் கேப்டன் அஸ்வின், பெரியசாமி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தின.