இனி யாரால் தினேஷ் கார்த்திக்கை கட்டுப்படுத்த முடியும்? - தேர்வுக்குழு உறுப்பினர்!
அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா இல்லையா என்பது குறித்தான பிசிசிஐயின் நிலைப்பாட்டை இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸின் பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்கை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வியந்து பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Trending
இது குறித்து தேர்வுக்குழு உறுப்பினர் பேசுகையில், “இனி யாரால் தினேஷ் கார்த்திக்கை கட்டுப்படுத்த முடியும். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவரது இடத்தை உறுதி செய்து விட்டார். அவருக்கு இடம் கிடைப்பது உறுதி. ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து வரும் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு கிடைத்துள்ள புதிய பலமாகவே நாங்கள் கருதுகிறோம்.
அவரது அனுபவமும் இந்திய அணிக்கு கிடைத்துள்ள சொத்து, டி.20 உலகக்கோப்பையில் அதை சரியாக பயன்படுத்தி கொள்வதே சரியானதாக இருக்கும். என்னை போலவே அனைத்து தேர்வாளர்களும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தால் கவரப்பட்டுள்ளனர், எனவே அவருக்கு நிச்சயமாக இடம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now