
வங்கதேசம் சென்றுள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்ரு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் தாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் வெறும் 186 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது. கேஎல் ராகுலை (73) தவிர மற்ற வீரர்கள் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்கவில்லை.
இதன்பின் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்கம் சரியாக அமைந்தாலும், மிடில் ஆர்டரில் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தததன் மூலம் 136 ரன்கள் எடுத்த போது வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு விக்கெட்டை எடுத்தால் வெற்றி என்ற இலகுவான வாய்ப்பு இந்திய அணியை தேடி வந்த போதிலும், இந்திய அணியால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. மெஹ்தி ஹசனின் விக்கெட்டை கடைசி வரை கைப்பற முடியாத இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
பேட்டிங்கில் சொதப்பியது மட்டுமல்லாமல், பீல்டிங்கிலும் சொதப்பியதே இந்திய அணியின் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேஎல் ராகுல் மற்றும் வாசிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் கேட்ச்சை நழுவவிட்டதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.