
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் ஆதிக்கம் தான் தொடக்கத்தில் இருந்தே உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை பார்த்து கொண்டாடியதை விட, சீனியர் வீரர் சட்டேஷ்ஸ்வர் புஜாராவின் பேட்டிங்கை பார்த்து தான் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் டாப் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றிய போதும், தூண் போல நின்ற புஜாரா, 90 ரன்களை அடித்திருந்தார். இதே வேகத்துடன் 2வது இன்னிங்ஸில் ஆடி 102 ரன்களை அடித்து அசத்தினார். கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்த அவர், 3 வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளா. இதன் மூலம் அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்துக்கொண்டார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வெறும் 130 பந்துகளில் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார். புஜாரா தனது டெஸ்ட் பயணத்தில் அடித்த அதிவேக சதம் இதுவாகும். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இப்படி அதிரடி பாதைக்கு திரும்பியுள்ள சூழலில், ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் விட்டுள்ளார்.