
இந்திய அணிக்கு 2000 முதல் 2005ஆம் ஆண்டுவரை பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் ஜான் ரைட், இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் சென்றார். இவரது பயிற்சியின்கீழ்தான் இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது.
இதனைத் தொடர்ந்து 2003-2004ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடலை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. மேலும் 2003ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.
இவருக்குப் பிறகு கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இந்திய அணியை மேலும் முன்னேற்றி காட்டினார். குறிப்பாக 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்து அசத்தினார். அடுத்து ரவி சாஸ்திரி வந்தார். இவரும், கோலியும் இணைந்து இந்திய அணியை ஆளுமைமிக்க அணியாக அதாவது ஆக்ரோஷமாக செயல்படுவதில், ஆஸ்திரேலிய அணிக்கே டஃப் கொடுக்க வைத்தார்கள்.