
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் லீக் சுற்றின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 29ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரில் மோதவுள்ளது.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடர் ஜுன் 9ஆம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. ஐபிஎல்-ல் விளையாடியதை பொறுத்து தேர்வு அமையவுள்ளது.
தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தலைமையில் நாளை மும்பையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் தேர்வு என்ற இறுதிப்பட்டியல் முடிவு செய்யப்படும். ஏற்கனவே ரோஹித் சர்மா, விராட் கோலி, பந்த், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ள சூழலில் புதிய அணியை உருவாக்குகின்றனர்.