
இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி சட்டாகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணி 34 ஓவர்களில் 182 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த போட்டியில் இளம் வீரர் இஷான் கிஷான் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய அவர் 131 பந்துகளில் 210 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போல இரட்டை சதம் அடித்த 4ஆவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் இஷான் கிஷானின் ஆட்டம் குறித்து சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “முதல் 5 ஓவர்களுக்கு பின்னர் இஷான் கிஷான் தனது இன்னிங்ஸை வேகப்படுத்திய விதம் மிகவும் அழகாக இருந்தது. அவரின் ஷாட்களும், பவுலர்களை தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருந்த விதமும் அவ்வளவு சிறப்பாக இருந்தது.