மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் தினேஷ் கார்த்திக் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 31 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றைப்படையில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். காயம் காரணமாக பீல்டிங் செய்யாமல் வெளியேற லக்னோ அணியின் யாஷ் தாக்கூருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி தொடக்க வீரராக களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்ணல் பாண்டியா ஹாட்ரிக் பவுண்டரி அடித்த நிலையில், சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Trending
மேக்ஸ்வெல் தனது முதல் ஓவரிலேயே குர்ணல் பாண்டியா விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தீபக் கூடா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரேயொரு ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலமாக மொத்தமாக ஆடிய 9 போட்டிகளில் தீபக் கூடா 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமே 17 ரன்னு தான்.
Win Big, Make Your Cricket Tales Now