சதத்தைப் பதிவு செய்யாதது ஏமாற்றமளித்தது - அபித் அலி
இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தது அபித் அலி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களை விளாசிய அபித் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தது அபித் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் நானும் அப்துல்லாவும் சிறப்பாக விளையாடினோம். அதுவும் நான் எதாவது பிழை செய்யும் போது அவர் என்னிடம் அதனை சரிசெய்ய முயற்சித்தார்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அந்த இரண்டாவது சதத்தை என்னால் பெற முடியாமல் போனது சற்று ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now