1-mdl.jpg)
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் அயர்லாந்து அணியை 100 ரன்களில் சுருட்டி விடலாம் என நினைத்த பும்ராவுக்கு அந்த அணியின் கீழ் வரிசை வீரர் பேரி மெக்கார்த்தி தக்க பதிலடி கொடுத்தார்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் மெக்கார்த்தி அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசபட்டது. இதனால் அயர்லாந்த அணி 139 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. அதன்பின் இந்திய அணி விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு காரணமாக இருந்த பேரி மெக்கார்த்தி மழையால் இந்தியா வெற்றி பெற்றது குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “அணிக்காக பங்களிப்பை கொடுப்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கடைசியில் எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.