
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன. மேலும் இம்முறையும் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதுவார்கள் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதன் காரணமாக இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் நடைபெற இருக்கும் ஐசிசி சம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் கேப்ட்ன் சாரித் அசலங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்வதென்றால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தைப் பற்றி யோசித்து எந்த பயனும் இல்லை. கடந்த காலத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.