
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான அவர் டுவைன் பிராவோ. இவர் அடிக்கடி வெஸ்ட் இண்டீஸ் நாட்டை தாண்டி தனது இரண்டாவது தாய்வீடு சென்னைதான் என்று கூறும் அளவிற்கு தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்.
இந்நிலையில் தான் டுவைன் பிராவோ தற்போது தமிழ்நாட்டு மக்களுக்காக உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்.
இதுகுறித்து பிராவோவின் ட்விட்டர் பதிவில், “தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதிலிருந்து விரைவில் மீள மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். அரசு அறிவித்துள்ள நெறி முறைப்படி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள் குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.